/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
/
விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறிய கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : செப் 18, 2025 12:32 AM
சென்னை, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்காமல், விதிகளை மீறிய கட்டுமான நிறுவனத்துக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கம் பகுதியில் புரவங்கரா நிறுவனம் சார்பில், 2,174 வீடுகள் வரை கட்ட திட்டமிடப்பட்டது. இதில் வீடு வாங்க, தமிழ்செல்வன் என்பவர் பணம் செலுத்தினார்.
ஆனால், குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணிகள் முடியவில்லை என, கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்செல்வன் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.
இதை விசாரித்த ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய, 2021ல் உத்தரவிட்டது. இதில், 990 வீடுகளுக்கு மட்டுமே, அந்நிறுவனம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
கூடுதல் வீடுகள் கட்ட, சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்க முடிவு செய்த நிலையில், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, அந்த கட்டுமான நிறுவனம் ஆவணங்களை அளிக்காததால், இது குறித்து ரியல் எஸ்டேட் ஆணையம் மீண்டும் விசாரித்தது. அதன்பின், ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவு:
இந்த குறிப்பிட்ட திட்டத்தில் வீடுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ற சுற்றுச்சூழல் அனுமதி ஆவணம் தாக்கல் செய்யப்படவில்லை. இது குறித்து மனுதாரர் கேட்டும், கட்டுமான நிறுவனம் உரிய ஆவணங்களை அளிக்கவில்லை.
எனவே, இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை கட்டுமான நிறுவனம், இத்தொகையை அந்நிறுவனம், அக்., 15க்குள் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, கூடுதல் எண்ணிக்கை வீடுகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி ஆவணங்களை, அக்., 15க்குள் கட்டுமான நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.