/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முறை தவறிய கள்ளக்காதல் இருவரும் தற்கொலை முயற்சி
/
முறை தவறிய கள்ளக்காதல் இருவரும் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 26, 2025 12:21 AM
கோயம்பேடு, முறை தவறிய கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால், தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய இருவர் மீட்கப்பட்டனர்.
ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் அருண் குமார், 38. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவரது மனைவியும் மகனும், பெங்களூரில் வசித்து வருகின்றனர். அருண்குமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜாபர்கான்பேட்டையில் உள்ள தன் பெரியப்பா வீட்டில் தங்கி, வேலை செய்து வந்தார்.
அங்கு, பெரியப்பா மகள் கிரிஜா, காதல் திருமணம் செய்து, கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருடன் அருண்குமாருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் இதையறிந்த கிரிஜாவின் கணவர், அவரை கண்டித்துள்ளார். கடந்த 23ம் தேதி கிரிஜா மாயமானார். இது குறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருவரும் கிடந்தனர். அவர்களை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

