ADDED : மார் 07, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி மாநகராட்சியில், கடந்த டிசம்பர் மாதம் 'மிக்ஜாம்' புயல் பாதிப்பால் 239 கி.மீ., துாரம் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் மண் தரையாக உள்ள பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டன.
அதன்படி, 15வது மத்திய நிதிக்குழு மானியம், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி மாநில நிதிக்குழு மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நிதியில் இருந்து, 49.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 86.71 கி.மீ., துாரத்திற்கு 499 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கியுள்ளன.
இந்த பணிகள், நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

