ADDED : பிப் 03, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அண்ணா நகர் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர், மாதவரம் போக்குவரத்திற்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து ஆய்வாளர் ராஜா, நீலாங்கரை போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், 22 இன்ஸ்பெக்டர்கள் வெவ்வேறு இடங்களுக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.

