/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் முடிவுக்கு காத்திருப்பதால் சோழிங்கநல்லுாரில் பணி பாதிப்பு
/
தேர்தல் முடிவுக்கு காத்திருப்பதால் சோழிங்கநல்லுாரில் பணி பாதிப்பு
தேர்தல் முடிவுக்கு காத்திருப்பதால் சோழிங்கநல்லுாரில் பணி பாதிப்பு
தேர்தல் முடிவுக்கு காத்திருப்பதால் சோழிங்கநல்லுாரில் பணி பாதிப்பு
ADDED : மே 14, 2024 12:29 AM
சோழிங்கநல்லுார்,இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்க மண்டலமானதால், அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதற்கேற்ப சாலை, வடிகால், மண்டபம், பூங்கா, விளையாட்டு மைதானம், வார்டு அலுவலகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணிக்கு மட்டும், 72 கோடி ரூபாயும், இதர பணிகளுக்கு, 50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு பணி நடக்கிறது.
இந்த பணிகள், தேர்தல் தேதி அறிவிப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மண்டல அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாறாக, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர், லோக்சபா தேர்தல் முடிவு அறிவித்த பின், மீண்டும் பழைய இடம் அல்லது வேறு மண்டலத்திற்கு மாறிச் செல்ல உள்ளனர்.
இதனால், அவர்கள் பணியில் போதிய அக்கறை காட்டாமல், பெயரளவுக்கு பணிபுரிவதாக கூறப்படுகிறது.
அதேபோல், மண்டல சுகாதார அதிகாரி, சில வார்டுகளில் ஆய்வு செய்து, அந்த போட்டோவை குழுவில் பதிவு செய்து, அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால், கோப்புகள் தேங்கி உள்ளன.
பிறப்பு, இறப்பு பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகள், கொசு ஒழிப்பு, விடுதிகள் கண்காணிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான சுகாதார பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் செயல்பாடு திருப்தி இல்லாததால், துாய்மை பணிகள் முறையாக நடக்கவில்லை. நீர்நிலைகளை ஒட்டி கொட்டப்படும் குப்பையை அகற்றுவதில்லை.
எனவே, உயர் அதிகாரிகள் தலையிட்டு, மண்டலத்தில் நடக்கும் பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

