/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்கள் பிளஸ், மைனஸ் என்ன? அ.தி.மு.க., ௶'‛காமெடி' பிரசாரம்
/
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்கள் பிளஸ், மைனஸ் என்ன? அ.தி.மு.க., ௶'‛காமெடி' பிரசாரம்
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்கள் பிளஸ், மைனஸ் என்ன? அ.தி.மு.க., ௶'‛காமெடி' பிரசாரம்
ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர்கள் பிளஸ், மைனஸ் என்ன? அ.தி.மு.க., ௶'‛காமெடி' பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 12:08 AM
அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, அம்பத்துார் சட்டசபை தொகுதியில், அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலருமான அலெக்சாண்டர், அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமாருக்காக, பிரசாரம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், 35 வயது இளைஞர். அதிலும், மருத்துவர்; ஆரோக்கியமாக இருக்கிறார்.
தொகுதி மக்களும் ஆரோக்கியமாக இருக்க உழைப்பார். ஆனால் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, 83 வயது முதியவர்.
அம்பத்துார் சி.டி.எச்., சாலை மற்றும் ரயில்வே பாலம் விரிவாக்கம், அரசு பொது மருத்துவமனை என, எந்த வாக்குறுதியையும், டி.ஆர்.பாலு நிறைவேற்றவில்லை. அம்பத்துாரில், எப்போதாவது நடக்கும் தி.மு.க., நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பார்; தொகுதி மக்களை சந்திக்கவில்லை.
அ.தி.மு.க., வேட்பாளருக்கு, இந்த தொகுதிக்கு அருகில்தான் வீடு உள்ளது. அதனால் அவரை, மக்கள் அடிக்கடி சந்திக்க முடியும்.
தவிர, வயதான தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தொகுதி பக்கம் வர இயலுமா என்பது சந்தேகம்தான்.
அம்பத்துார் மக்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள். அதனால் டி.ஆர்.பாலுவுக்கு ஓட்டளித்து, அவரை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்.
அவருக்கு ஓய்வு கொடுங்கள். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.
அதற்கு பதிலாக, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமாரை வெற்றி பெறச் செய்து, வேலை கொடுங்கள் என, அலெக்சாண்டர் காமெடியாக பிரசாரம் செய்து வருகிறார்.

