/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருளுடன் இருவர் கைது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது அம்பலம்
/
போதை பொருளுடன் இருவர் கைது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது அம்பலம்
போதை பொருளுடன் இருவர் கைது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது அம்பலம்
போதை பொருளுடன் இருவர் கைது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது அம்பலம்
ADDED : மே 23, 2024 12:29 AM
கோயம்பேடு, கோயம்பேடில், போதைப் பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் போதை ஊசி செலுத்திக் கொண்டு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அதிக அளவில் போதைப் பொருள் எடுத்துச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து, கோயம்பேடு தனிப்படை போலீசார் கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஒருவர், தன் மொபைல்போனை எடுத்த போது, அவரது பாக்கெட்டில் இருந்து ஊசி கீழே விழுந்துள்ளது. சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், ஆம்பூரைச் சேர்ந்த முகமது கவுஜான், 35, என தெரிந்தது. அவருடன் வந்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பரசுராமன், 26, என்பவரையும் போலீசார் பிடித்தனர்.
இவர்களிடம் இருந்து, 3 கிராம் எடை உடைய 'மெத்தமின்' போதைப் பொருள் பவுடர் மற்றும் 11 ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இருவரும், வேளச்சேரியில் இருந்து 3,500 ரூபாய்க்கு போதைப் பொருளை வாங்கியது தெரிந்தது.
அத்துடன், இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் போதைப் பொருள் வாங்க, புதுச்சேரியில் இருந்து கல்லுாரி மாணவர் ஒருவரும் வந்துள்ளார்.
விசாரணையில், போதைப் பொருளுக்காக கல்லுாரி மாணவரும், அவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கல்லுாரி மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இவர்கள், போதைப் பொருளை வாங்கி வந்து, சென்னையில் தனியாக அறை எடுத்து தங்கி, போதை ஊசி செலுத்திக் கொண்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

