ADDED : ஆக 10, 2024 12:30 AM
தாம்பரம், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று மாலை, தடம் எண்: 500 மாநகர பேருந்து புறப்பட்டது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, மேடவாக்கத்தில் தங்கி பெருங்களத்துாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணை, கைக்குழந்தையுடன் ஏறிய ஒரு பெண்ணும், அவரது தாயும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தட்டிக்கேட்ட மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளனர். இதைக் கவனித்த ஓட்டுனர், இரும்புலியூர் அருகே பேருந்தை நிறுத்தி அவர்களை இறக்கியுள்ளார்.
சீட்டில் துண்டு போட்டு, இருக்கையை பிடிக்க எழுந்திருக்குமாறு கூறியதாகவும், மேற்குவங்க பெண் மறுத்ததால், தாயும், மகளும் சேர்ந்து தாக்கியதும் தெரியவந்தது. தாம்பரம் போலீசார், பாதிக்கப்பட்ட மேற்கு வங்க பெண்ணை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரையும், இன்று விசாரணைக்கு வருமாறு கூறி, அனுப்பி வைத்தனர்.

