ADDED : ஏப் 20, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செயல்படாத இலவச புகார் எண்
லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து, பலரது பெயர் விடுபட்டுள்ளது. இதனால், பலரும் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தங்கள் பெயர் அல்லது உறவினர் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நிலையில், சிலர், '1950' என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்ய முயன்றனர். ஆனால், அந்த எண் செயல்படவில்லை. அதை தொடர்ந்து, 1,800 என்ற எண்ணில் தொடர்பு கொண்ட போது, ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே பேச முடிந்தது. மொழி தெரியாதவர்கள் வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பினர்.

