/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு தரப்பினர் மோதல் சிறுவன் உட்பட மூவர் கைது
/
இரு தரப்பினர் மோதல் சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 23, 2024 12:23 AM
அயனாவரம், அயனாவரம், என்.எம்.கே., தெருவில் நேற்று முன்தினம் இரவு, 16 முதல் 17 வயதுடைய ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
அப்போது, 17 வயது சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், எதிர் தரப்பினரை தாக்க முயன்றார்.
எதிர் தரப்பினர் அவரது கத்தியை பறித்து, 17 வயது சிறுவனை தாக்கிவிட்டு தப்பினர்.
காயமடைந்த சிறுவனை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக, பரத், 19, அபினேஷ், 18, உட்பட எட்டு சிறுவர்களை பிடித்து, அயனாவரம் போலீசார் விசாரித்தனர். இதில், நண்பர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால், தாக்கிக் கொண்டது தெரிந்தது.
பின், கத்தி வைத்திருந்த 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், அயனாவரத்தைச் சேர்ந்த பரத், அபினேஷ் இருவரை சிறையிலும் அடைத்தனர்.
மற்ற ஐந்து சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

