/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
/
32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
ADDED : ஏப் 24, 2024 12:51 AM
சென்னை, சென்னை பெருநகரில், ஜன., பிப்., மார்ச் மாதங்களில், 32 அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதற்காக தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017 ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கால அவகாசம், 2019ல் முடிந்தது.
இந்நிலையில், வரன்முறைக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒருமுறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசமும் முடிந்த நிலையில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர் பகுதியில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளுக்கு சி.எம்.டி.ஏ., தொழில்நுட்ப அனுமதி வழங்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வரைபடங்களை ஆராய்ந்து வரன்முறை உத்தரவு வழங்கும்.
இந்த வகையில், ஜன., பிப்., மார்ச் ஆகிய மூன்று மாதங்களில், 32 கோப்புகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு, 12 மாதங்களில், 126 கோப்புகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டது. தற்போது மூன்று மாதங்களில், 32 கோப்புகளுக்கு ஒப்புதல் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

