/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11,843 இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
/
11,843 இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
ADDED : ஏப் 11, 2024 12:17 AM

சென்னை மாவட்டத்தின் 16 சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.
ஜார்ஜ் டவுன், பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, நாளை வரை மூன்று நாட்களுக்கு நடக்கும்.
ஓட்டுப்பதிவிற்கு 11,843 மின்னணு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
மத்திய சென்னையில், 31 வேட்பாளர்கள் இருப்பதால், இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவும், தென்சென்னையில் 41 வேட்பாளர்கள்; வடசென்னையில் 35 வேட்பாளர்கள் இருப்பதால், அங்கு தலா மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்காளர் 'பூத் சிலிப்' இதுவரை 16.7 லட்சம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

