/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐஸ்கிரீம் வியாபாரியிடம் ரூ.53,000 பறிமுதல்
/
ஐஸ்கிரீம் வியாபாரியிடம் ரூ.53,000 பறிமுதல்
ADDED : மார் 27, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, சென்னை -ஆவடி சட்டசபை தொகுதி, சென்னீர் குப்பம் சாலையில், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர், மாருதி ஆல்டோ காரை சோதனையிட்டனர்.
அதை ஓட்டி சென்ற, போரூரை சேர்ந்த ஐஸ் கிரீம் வியாபாரி தினேஷ், 20, என்பவரிடம் உரிய ஆவணமின்றி இருந்த, 53,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்ற காரை சோதனையிட்ட போது, அதில், அண்ணாநகரை சேர்ந்த காசிநாதன், 62, என்பவர் உரிய ஆவணம் இன்றி, 76,000 ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது.

