/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை பணி முடிந்ததால் மடிப்பாக்கத்தில் சாலைகள் புதுப்பொலிவு
/
பாதாள சாக்கடை பணி முடிந்ததால் மடிப்பாக்கத்தில் சாலைகள் புதுப்பொலிவு
பாதாள சாக்கடை பணி முடிந்ததால் மடிப்பாக்கத்தில் சாலைகள் புதுப்பொலிவு
பாதாள சாக்கடை பணி முடிந்ததால் மடிப்பாக்கத்தில் சாலைகள் புதுப்பொலிவு
ADDED : ஜூலை 23, 2024 12:34 AM

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி 256.90 கோடி ரூபாய் செலவில், 2022ல் துவங்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகளும் ஆரம்பித்தன.
நான்கு மாதங்களுக்கு முன், இரு பணிகளும் தீவீரமடைந்ததால், வார்டு 188க்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட உட்புற சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, பணிகள் நடந்தன.
இந்த பள்ளங்களை சரியாக மூடாததால், மழைநீர் தேங்கி, சாலை சேறும் சகதியுமாக மாறியது; மக்கள் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இது குறித்து நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியானது.
இதையடுத்து, பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில், சாலையை அமைக்கும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பெருங்குடி மண்டல செயற்பொறியாளர் முரளி கூறியதாவது:
வார்டு 188க்கு உட்பட்ட பகுதி, முன்பு விவசாயம் நிலமாக, சதுப்பு நிலம் ஒட்டிய பகுதியாக இருந்தது. இதனால், இங்குள்ள தெருக்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில், மண்ணின் நெகிழ்வு தன்மை மிகுதியாக இருந்தது.
பணிகள் முடிந்து, பள்ளங்களில் மண் கலவை மூடினாலும், மழைநீர் தேங்கும்போது உள்வாங்கியது.
இதனால், பள்ளங்களில் சிமென்ட் கலவையை நிரப்பி, அதன் மேல் சாலை அமைத்தால் மட்டுமே, புதிய சாலைகள் தரமாகவும், வலுவாகவும் இருக்கும் என்பதை, ஆய்வுகள் வாயிலாக கண்டறிந்தோம்.
அதன்படி, வார்டு 188க்கு உட்பட்ட குபேரன் நகர், ராம் நகர், எல்.ஐ.சி., நகர் உள்ளிட்ட தெருக்களில், பாதாள சாக்கடை பள்ளங்களை சிமென்ட் கலவையால் நிரப்பும் பணிகள் முடிக்கப்பட்டு, அங்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

