/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கான்கிரீட் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
கான்கிரீட் சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஆக 12, 2024 04:25 AM

மணலி:மணலி, பாடசாலை தெரு - அய்யப்பன் கோவில் அருகே, மணலி பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து, கோயம்பேடு, வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்பட்டன.
இந்த நிலையில், பாடசாலை தெருவில் 4 கோடி ரூபாய் மதிப்பீடில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதனால், மணலி பேருந்து நிலையத்திற்கு பதிலாக, காமராஜர் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே உள்ள காலி மைதானத்தில் இருந்து, இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அடிப்படை வசதியில்லாத இடத்தில் பேருந்து நிலையம் செயல்படுவதால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர். தற்போது, காலி மைதானத்திலும் பணிகள் நடப்பதால், பேருந்துகள் சாலையோரம் நிறுத்தப்பட்டு பயணியரை ஏற்றி செல்கின்றன. இதனால், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படும் பயணியர், ஆட்டோக்கள் மூலம், ஒன்றரை கி.மீ., துாரத்தில் உள்ள மணலி பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
காரணம், மணலியின் மையமாக இப்பகுதி உள்ளது. இங்கிருந்து தான், ேஷர் ஆட்டோ உள்ளிட்டவை பயன்படுத்தி மணலியின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, மக்கள் நலனை கருத்தில் வைத்து, கான்கிரீட் சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

