/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவுக்கு ரூ.65 கோடியில் கட்டடம்
/
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவுக்கு ரூ.65 கோடியில் கட்டடம்
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவுக்கு ரூ.65 கோடியில் கட்டடம்
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் பிரிவுக்கு ரூ.65 கோடியில் கட்டடம்
ADDED : மே 17, 2024 12:36 AM

சென்னை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, 2,500 படுக்கை வசதிகளுடன், தினமும் 15,000 புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இம்மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கென, 1,12,000 சதுர அடியில், நான்கு தளங்களுடன் கூடிய புதிய கட்டடம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இவற்றில், 220 படுக்கை வசதிகளோடு, உலக தரத்தில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில், நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவ பிரிவு போன்ற வசதிகள் உள்ளன.
முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள், ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
நான்காம் தளத்தில் நவீன வசதிகள் உடைய ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக பொதுப்பணித்துறை வாயிலாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, பொது கழிப்பறை, மின்துாக்கிகள், படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற வசதிகள் இடம்பெற்றிருப்பதாக, அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

