/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு
/
2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு
ADDED : ஏப் 25, 2024 12:54 AM

மணலி, மணலி, காமராஜ் சாலையில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ராதா, அங்கம்மா ஆகியோர் நேற்று, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணலி, சி.பி.சி.எல்., நிறுவனம் எதிரில் உள்ள கால்வாயில் சேற்றில் சிக்கியபடி, 40 வயது மதிக்கத்தக்க நபர் மயக்கத்தில் இருந்துள்ளார்.
முழங்கால் முழுதும் சேற்றில் சிக்கிய நிலையில், வெளியே வர முடியாமல் தவித்தார்.
மேலும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர் குறித்து, துாய்மை பணியாளர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து, துாய்மை பணியாளர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். அவர் சேற்றில் சிக்கி, இரு நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்திருக்கலாம் என தெரிகிறது.
கால்கள் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதால், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரைப் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

