/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகரில் துர்கா பூஜை சிலைகள் தயாரிப்பு தீவிரம்
/
தி.நகரில் துர்கா பூஜை சிலைகள் தயாரிப்பு தீவிரம்
ADDED : ஆக 27, 2024 12:45 AM

தி.நகர், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க உள்ள துர்கா பூஜை திருவிழாவிற்காக, தி.நகரில் துர்கா சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் வேப்பேரி, சவுகார்பேட்டை, கோபாலபுரம், அயனாவரம், தி.நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
துர்கா பூஜையின் போது, விதவிதமாக துர்கை மற்றும் காளி பொம்மைகள் செய்து, ஒன்பது நாட்கள் வழிப்பட்டு, இறுதி நாளான விஜயதசமியில், சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பர்.
இதற்கான சிலைகளை, ஒரு காலத்தில் கோல்கட்டா சென்று வாங்கி வந்தனர். தற்போது, மேற்கு வங்கத்தில் இருந்து சிலை செய்வோர் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர்.
சென்னை, தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த கலைஞர்கள், ஒரு மாதமாக தங்கியிருந்து சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
பொம்மை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் மேற்கு வங்கத்தில் இருந்தே கொண்டு வந்து, பாரம்பரியமான முறையில் உருவாக்கி வருகின்றனர்.

