/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் போய் புத்தாண்டு வருது இன்னும் கிடைக்கலை வேட்டி - சேலை
/
பொங்கல் போய் புத்தாண்டு வருது இன்னும் கிடைக்கலை வேட்டி - சேலை
பொங்கல் போய் புத்தாண்டு வருது இன்னும் கிடைக்கலை வேட்டி - சேலை
பொங்கல் போய் புத்தாண்டு வருது இன்னும் கிடைக்கலை வேட்டி - சேலை
ADDED : ஏப் 12, 2024 12:22 AM
திருவொற்றியூர்,திருவொற்றியூர் உணவு பொருள் வழங்கல் துறை மண்டலத்தின் கீழ், 104 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் வேட்டி - சேலை, மூன்றில் இரு பங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு, வழங்கப்படவில்லை.
கடை ஒன்றில், 900 குடும்ப அட்டைகள் இருக்கும் பட்சத்தில், வெறும் 300 எண்ணிக்கையிலான, வேட்டி - சேலை மட்டுமே வினியோகிக்கப்பட்டது.
வேறு வழியின்றி, நியாயவிலைக் கடைக்காரர்களும், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து, வேட்டி - சேலையை வினியோகித்து விட்டனர். இதனால், கடை ஒன்றிற்கு, 600 பேருக்கு விடுப்பட்டு உள்ளது.
இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டால், முறையான பதில் கிடையாது.
கடைக்காரர்களுக்கும் தெளிவான பதில் சொல்ல தெரியவில்லை.
நுகர்வோருக்கு, வேட்டி - சேலை வாங்காவிட்டால் அரசின் சலுகைகள் மற்றும் நியாயவிலைக் கடை பொருட்கள் நிறுத்தப் படுமா என்ற சந்தேகமும் உள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விளக்கம் தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

