/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி சபாநாயகர் அலுவலகத்தில் மனு
/
எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி சபாநாயகர் அலுவலகத்தில் மனு
எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி சபாநாயகர் அலுவலகத்தில் மனு
எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி சபாநாயகர் அலுவலகத்தில் மனு
ADDED : ஆக 13, 2024 12:17 AM
சென்னை, ஆக. 13-
காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசன் மவுலானா மீதான நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை ஆய்வு செய்து, அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தலைநகர் சென்னை மக்கள் இயக்கம் சார்பில், சபாநாயகர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கிருஷ்ணமூர்த்தி நகரில், ராமகிருஷ்ணன் தெரு, சன்னதி தெரு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள, கணபதி தெருவை, வேளச்சேரி எம்.எல்.ஏ., அசன்மவுலானா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அவர்களின் நிலம், கணபதி தெருவில் இரு பகுதியிலும் உள்ளதால், கணபதி தெருவை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இதை கண்டித்து அப்பகுதி குடியிருப்பு நல சங்கத்தினர் சட்டப் போராட்டம் நடத்தி மே 21 அன்று, மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் சென்று சுற்றுச்சுவரை இடித்துள்ளனர். அங்கு எம்.எல்.ஏ., சென்று, குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ராமச்சந்திரராவ் மற்றும் நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எம்.எல்.ஏ.,வாக தான் பொறுப்பேற்றுக் கொண்டபோது எடுத்த உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் எம்.எல்.ஏ., பதவி வகிக்க தகுதியற்றவராகிறார். இதை ஆய்வு செய்து, அவரை எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

