/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி மின்வெட்டு வெயிலால் மக்கள் அவதி
/
அடிக்கடி மின்வெட்டு வெயிலால் மக்கள் அவதி
ADDED : மே 02, 2024 12:41 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு இந்த நிலையில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், மின்சாரத்தின் தேவை மிக அவசியமாகிறது.
இதனிடையே, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால், திருவொற்றியூர், எண்ணுார், மணலி சுற்றுவட்டார மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
பகல் நேரங்கள் மட்டுமின்றி, இரவு மற்றும் நள்ளிரவு வேளைகளில் ஏற்படும் திடீர் மின் தடை, குழந்தைகள் முதல் முதியோர் வரை, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புழுக்கம் தாங்காமல், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, மொட்டை மாடி, வாசற்படி, மரத்தடியில் தஞ்சமடைகின்றனர். திடீர் மின்தடை குறித்து, வாரியத்திற்கு புகார் தெரிவிக்க முற்பட்டாலும், யாரும் போனை எடுப்பதில்லை.
இரவில் துாக்கம் தொலைத்து நிற்கிறோம்; குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள், வேறு வழியின்றி, தங்களது உறவினர்கள் வீட்டிற்கு படையெடுக்கின்றனர் என, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, அடிக்கடி நிலவி வரும் மின் தடைக்கு முடிவு கட்ட வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

