/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி தடத்தில் போதிய ரயில் சேவையின்றி பயணியர் தவிப்பு
/
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி தடத்தில் போதிய ரயில் சேவையின்றி பயணியர் தவிப்பு
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி தடத்தில் போதிய ரயில் சேவையின்றி பயணியர் தவிப்பு
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி தடத்தில் போதிய ரயில் சேவையின்றி பயணியர் தவிப்பு
ADDED : ஏப் 04, 2024 12:32 AM
சென்னை,
சென்னை எழும்பூர் -- கடற்கரை ரயில் நிலையம் இடையே, நான்காவது ரயில் பாதை 4.2 கி.மீ., துாரத்திற்கு, 279 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன.
பணிகள் துவங்கியதை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை மற்றும் மாலை வேளைகளில் பயணியர் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. தற்போது, வெயில் வாட்டி வதைப்பதால், பயணியர் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே, தினமும் 122 மின்சார ரயில்கள் சேவை இருந்தன. இது, தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான நேரங்களில், 20 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.
அலுவலகத்துக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மின்சார ரயில்களின் படிகளில் தொங்கியபடி, ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4வது புதிய பாதைக்கு முக்கியத்துவம் அளித்து, பணிகள் வேகமாக நடக்கின்றன. பணிகளை முடித்து, மீண்டும் சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு வழக்கம்போல் மின்சார ரயில்களை இயக்க உள்ளோம். சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி தடத்தில், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

