/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முடிச்சூர் ஏரி மேம்பாடு: வடிவமைப்பு வெளியீடு
/
முடிச்சூர் ஏரி மேம்பாடு: வடிவமைப்பு வெளியீடு
ADDED : ஏப் 05, 2024 12:05 AM

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் ஏரியை மேம்படுத்தும் திட்டத்திற்கான வடிவமைப்புகள்,தனியார் அமைப்பு வாயிலாக தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகரில், நகர்ப்புற வளர்ச்சியால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வாக, ஏரிக்கரை மேம்பாட்டு திட்டத்தை சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
இதன்படி முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி ஆகியவை, 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக நீர்வளத்துறை, 12 கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இக்கட்டுப்பாடுகளை கருத்தில் வைத்து, ஏரிக்கரை மேம்பாட்டிற்கான வடிவமைப்பை தயாரிக்க போட்டி நடத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஏரிக்குமான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டன.
இந்த வகையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரிக்கான புதிய வடிவமைப்புகளை, கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 'ஜனா அர்பன் ஸ்பேஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ.,வுடன் கூட்டாக இணைந்து முடிச்சூர் ஏரி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக, அந்த அமைப்பு அறிவித்து உள்ளது.
நீராதார பாதுகாப்பு என்பதுடன், அக்கம் பக்கத்து பொதுமக்கள் ஏரியை முழுமையாக பயன்படுத்தும் வகையில், மேம்பாட்டு திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது.
சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், நடைபாதை, குளம், படிப்பு மையம், வாகனம் நிறுத்துமிடம் என, முழுமையான பொழுதுபோக்கு பகுதியாக, முடிச்சூர் ஏரி புதிய வடிவம் பெற உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

