/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாதவரம் - விம்கோ நகர் மெட்ரோ முனையத்தை இணைக்க வேண்டும்'
/
'மாதவரம் - விம்கோ நகர் மெட்ரோ முனையத்தை இணைக்க வேண்டும்'
'மாதவரம் - விம்கோ நகர் மெட்ரோ முனையத்தை இணைக்க வேண்டும்'
'மாதவரம் - விம்கோ நகர் மெட்ரோ முனையத்தை இணைக்க வேண்டும்'
ADDED : ஏப் 29, 2024 01:18 AM
திருவொற்றியூர்:சென்னை, திருவொற்றியூரில் பாரதி பாசறையின், 40வது பொதுக்குழு, தொழிலதிபர் வரதராஜன் தலைமையில், நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில், திருவொற்றியூரில் முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தியாகராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முறையான கழிப்பறை வசதியில்லை.
இருக்கும் கழிப்பறைகளும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சுகாதார சிக்கல்களை சரி செய்யாமல், திருவிழாக்களை எதிர்கொள்கின்றனர். அவற்றை சீர் செய்ய வேண்டும்.
திருவள்ளூவர் கோவிலை இடித்து, 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. வள்ளுவர் - வாசுகி சிலைகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. உடனடியாக, கோவிலை கட்டமைக்க வேண்டும்.
மாதவரம் - விம்கோ மெட்ரோ ரயில் முனையங்களை இணைக்க வேண்டும்.
திருவொற்றியூர், சண்முகனார் பூங்கா வளாகத்தில் இருக்கும் பாரதியார் சிலைக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உட்பட, ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தொழிலதிபர் துரைராஜ், பாசறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நீலகண்டன் உட்பட, பொதுக்குழு உறுப்பினர் பங்கேற்றனர்.
மேலும், பாசறையின் ஆண்டறிக்கை மற்றும் எதிர்கால திட்டமிடலை, செயலர் மா.கி.ரமணன் சமர்ப்பித்தார். விழாவில், பாசறை மூலம் தமிழ் பயின்ற மாணவரான, விஞ்ஞானி ஜெய்னுகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

