ADDED : மார் 28, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தென்சென்னை தொகுதியில், ஐ.எல்.பி., என்ற 'இந்தியன் லவ்வர்ஸ் பார்ட்டி' என்ற கட்சி தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இக்கட்சியின் பெயரில், குமார் ஸ்ரீஸ்ரீ என்பவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின், குமார் ஸ்ரீஸ்ரீ கூறியதாவது:
காதலர்கள் சுதந்திரமாக கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு செல்ல முடியவில்லை. பல இடங்களில் தாக்குதல் நடத்துகின்றனர்.
காதலர்களை காப்பாற்றுவதற்காகவே, இந்த கட்சியை துவக்கி, 2016ம் ஆண்டு பதிவு செய்துள்ளேன்.
இவ்வாறு கூறினார்.

