/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொத்து வரி வசூலில் காஞ்சி முதலிடம் 6வது இடம் பிடித்தது தாம்பரம்
/
சொத்து வரி வசூலில் காஞ்சி முதலிடம் 6வது இடம் பிடித்தது தாம்பரம்
சொத்து வரி வசூலில் காஞ்சி முதலிடம் 6வது இடம் பிடித்தது தாம்பரம்
சொத்து வரி வசூலில் காஞ்சி முதலிடம் 6வது இடம் பிடித்தது தாம்பரம்
ADDED : ஏப் 29, 2024 01:25 AM

காஞ்சிபுரம்:சொத்து வரியில், 82.65 சதவீதம் வசூல் செய்ததால், மாநிலத்திலேயே காஞ்சிபுரம் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
மாநிலத்தில் சென்னையை தவிர்த்து, 20 மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாநகராட்சி வருவாய்களில், முதன்மையானதாக சொத்து வரி உள்ளது.
சொத்து வரி உள்ளிட்ட பிற வகையான வரி இனங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதன் வாயிலாக, மாநகராட்சியில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அவ்வாறு, சொத்து வரி வசூலிப்பதில், 2023- - 24ம் நிதியாண்டில், மாநிலத்திலேயே காஞ்சிபுரம் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. நிதியாண்டு மார்ச் மாதம் முடிந்த நிலையில், இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்தாண்டு சொத்து வரி வசூலிப்பதில், கோவை மாநகராட்சி முதலிடமும், இரண்டாமிடம் காஞ்சிபுரம் மாநகராட்சியும், ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடமும் பெற்றிருந்தன.
இம்முறை, காஞ்சிபுரம் மாநகராட்சி முதலிடமும், ஈரோடு மாநகராட்சி இரண்டாமிடமும், திருப்பூர் மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், குடியிருப்பு மற்றும் வணிக ரீதியில் 52,033 கட்டடங்கள் உள்ளன. இதில், 71 அரசு கட்டடங்களும் அடங்கும்.
இந்த கட்டடங்களுக்கு மாநகராட்சி ஆண்டுதோறும், மார்ச் மற்றும் செப்டம்பரில் என, இரு முறை சொத்து வரி விதிக்கிறது.
சொத்து வரி விதிக்கப்படும் கட்டட உரிமையாளர்களிடம், இம்முறை 82.65 சதவீதம் வசூலித்த காரணத்தால், முதலிடம் பெற முடிந்துள்ளது.
கடந்தாண்டு 75.80 சதவீதம் வசூலிக்கப்பட்டது. இம்முறை 6.85 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டைக் காட்டிலும், 10 சதவீதம் கூடுதலாக வசூலிக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியிருந்தது.
கூடுதலாக வசூலிக்கவும் நாங்கள் முயற்சி செய்தோம். 2023 - 24ல், 85.65 சதவீதம் வசூலானதால், முதலிடம் பிடிக்க முடிந்தது. வரி விதிப்பு சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் பல இருந்தன. அவற்றை தீர்த்து, வழக்குகளின் எண்ணிக்கையை குறைந்துள்ளோம்.
குடியிருப்பு வகைப்பாட்டில் பல அரசு கட்டடங்கள் இயங்கி வந்தன. அவற்றை கண்டறிந்து அரசு கட்டடங்களாக சரியாக வகைப்படுத்தி, வரி விதிப்பு செய்துள்ளோம்.
ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய இரு மாதங்களில், பாக்கியின்றி வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. இதனால், ஏப்ரல் மற்றும் அக்டோபரில் பெரும்பாலானோர் வரி செலுத்தினர். இதனாலேயே, சொத்து வரி தீவிரமாக வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

