/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி ராணுவ நிலையத்தில் நீர் பதப்படுத்தும் ஆலை திறப்பு
/
ஆவடி ராணுவ நிலையத்தில் நீர் பதப்படுத்தும் ஆலை திறப்பு
ஆவடி ராணுவ நிலையத்தில் நீர் பதப்படுத்தும் ஆலை திறப்பு
ஆவடி ராணுவ நிலையத்தில் நீர் பதப்படுத்தும் ஆலை திறப்பு
ADDED : ஏப் 25, 2024 12:47 AM

ஆவடி, ஆவடி ராணுவ நிலையத்தில் விருந்தினர் தங்குமிடம் மற்றும் நீர் பதப்படுத்தும் ஆலை, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதை, தக் ஷிண பாரத ராணுவ பகுதியின் தலைமை தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர்சிங் பிரார் மனைவியும், ஆவடி ராணுவ மகளிர் நல சங்க மண்டல தலைவருமான ஜஸ்பிர் பிரார், நேற்று முன்தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ராணுவ தொடக்கப் பள்ளியை பார்வையிட்ட அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடி, அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,''ஆவடி ராணுவ நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டமைப்பு வசதிகள், ராணுவ வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்,'' என தெரிவித்தார்.
திறப்பு விழாவில், ஆவடி ஆயுதக்கிடங்கு ராணுவ மகளிர் நல சங்கத்தின் தலைவர் சோனம் சோலங்கி மற்றும் ரித்திகா திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.