ADDED : ஜூலை 17, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 2 தேர்வுக்கு 507 பணியிடங்கள், குரூப் - 2ஏ தேர்வுக்கு, 1,820 பணியிடங்கள் என, மொத்தம் 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது.
இத்தேர்வுகளுக்கான, முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை முதல் துவங்குகிறது.
விபரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

