/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் உறுதியளிப்பு
/
கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் உறுதியளிப்பு
கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் உறுதியளிப்பு
கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் உறுதியளிப்பு
ADDED : ஏப் 15, 2024 01:09 AM

மதுரவாயல்:தேசிய ஜனநாயக கூட்டணியின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், அம்பத்துார், மதுரவாயல் பகுதிகளில் நேற்று, ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பும், மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் தெளிவாக தெரிகிறது.
பிரதமர் மோடியின் செயல்பாடு, மத்திய அரசின் திட்டங்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. பெண்களின் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு உள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய எம்.பி., டி.ஆர்.பாலு, தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதி பக்கம் வருவார்; மக்களை சந்திப்பார். மக்களை மதிக்காத அவருக்கு ஓட்டு போடாதீர்கள். கூட்டணி கட்சியினரின் கடின உழைப்பாலும், ஆதரவோடும் நான் வெற்றி பெறுவேன்.
நான் வெற்றி பெற்றால், மதுரவாயல், அம்பத்துார் சட்டசபை தொகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகளுக்கு முக்கியத்துவம் தருவேன்.
தொழிற்பேட்டை மையமாக விளங்கும் அம்பத்துாரில், மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வந்து, மக்களையும், தொழிற்சாலைகளையும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்; வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும். மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

