/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் -- நாகர்கோவில் 'வந்தே பாரத்' அனைத்து நாட்களும் நீட்டிக்கப்படுமா?

ADDED : ஜூலை 17, 2024 12:22 AM

சென்னை எழும்பூர் - - நாகர்கோவில் இடையே 'வந்தே பாரத்' ரயில்கள், கடந்த ஜனவரி முதல் சிறப்பு சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன.
முதலில் வாரத்தில் ஒருநாளும், சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், வாரத்தில் மூன்று நாட்களுக்கு நீட்டித்து இயக்கப்பட்டன.
தற்போது, சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு, வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது, விருதுநகரில் நிறுத்துவதற்கு பதிலாக, கோவில்பட்டிக்கு நிறுத்தம் மாற்றப்பட்டது.
அந்த வகையில், கோவில்பட்டியில் நின்று செல்லும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இது தான். இதன் வாயிலாக, துாத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரமான கோவில்பட்டி வியாபாரிகளும், அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை ரயிலுக்கு மேலும் வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
- நமது நிருபர் -