/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசர்கானா சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல குழு அமைப்பு
/
ஆசர்கானா சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல குழு அமைப்பு
ஆசர்கானா சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல குழு அமைப்பு
ஆசர்கானா சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மண்டல குழு அமைப்பு
ADDED : ஜூன் 17, 2024 01:17 AM
ஆலந்துார்:ஆலந்துார் மண்டலத்தில் உள்ள வார்டுகளில், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், மண்டல உதவிக் கமிஷனர், வார்டு வாரியாக கவுன்சிலர், நலச்சங்கத்தினர் அடங்கிய 'மண்டல ஆய்வு குழு' உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த குழு, வார்டுதோறும் சென்று, பொதுமக்கள் குறைகளை நலச்சங்கத்தினர் வாயிலாக கேட்டறிந்து, நிவர்த்தி செய்து வருகிறது.
அந்த வகையில், ஆதம்பாக்கம், நிலமங்கைநகர், வைகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பார்வையிட்டது. மேலும், சில தெருக்களில் வடிகால் தேவை குறித்து, பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆலந்துார் ஆசர்கானா பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து பார்வையிட்டது. அங்கு சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை காரணமாக கொண்டு ஏராளமான ஆக்கிரமிப்புகள், சாலையோர உணவகங்கள் அதிகரித்துள்ளன. அதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, மின்கம்பத்தை தள்ளி அமைக்க, மின்வாரிய அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாநகராட்சி, காவல் துறை இணைந்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டது.

