/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டு மிஷின் குறித்து வதந்தி பரப்பியவர் மீது வழக்கு
/
ஓட்டு மிஷின் குறித்து வதந்தி பரப்பியவர் மீது வழக்கு
ஓட்டு மிஷின் குறித்து வதந்தி பரப்பியவர் மீது வழக்கு
ஓட்டு மிஷின் குறித்து வதந்தி பரப்பியவர் மீது வழக்கு
ADDED : ஏப் 22, 2024 12:59 AM
எம்.கே.பி., நகர்,:தமிழகம் முழுதும், ஏப்., 19ம் தேதி, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அதன்படி, வடசென்னை லோக்சபா தொகுதியின் உள்ளடங்கிய, பெரம்பூர் சட்டசபை தொகுதியின், 150வது ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்த, வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்த விஜயகுமார், 30, என்பவர், எந்த பட்டனை அழுத்தினாலும், பா.ஜ., கட்சிக்கு ஓட்டு விழுவதாக புகார் தெரிவித்தார்.
புகாரை தொடர்ந்து, உதவி வருவாய் அலுவலர் அனுசியா தேவி, ஓட்டுச்சாவடியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வாலிபர் தெரிவித்த புகார், தவறானது என தெரியவந்தது.
விஜயகுமாரை அழைத்து, பாக முகவர்கள் முன்னிலையில் பரிசோதனை முயற்சியாக ஓட்டளிக்க செய்தனர். அப்போது சரியாக ஓட்டு பதிவாகியது.
எனவே, பொதுமக்களிடம் பொய்யான தகவலளித்தாகவும், காலை 11:10 மணி முதல் 12:20 மணி வரை, ஓட்டுப்பதிவு நேரத்தை வீணடித்ததாகவும், ஓட்டுப்பதிவு அலுவலர் ராஜலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், விஜயகுமார், 30, மீது, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தேர்தல் நாளன்று, மத்திய சென்னை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் அருகே உள்ள ஓட்டுச்சாவடியில், நா.த.க.,வுக்கு உரிய பட்டனை அழுத்தினால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, அக்கட்சியின் வேட்பாளர் கார்த்திக்கேயன், ஓட்டுச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், ஓட்டுச்சாவடி வெளியில் கார்த்திக்கேயன் உட்பட நா.த.க.,வினர் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து, உடனடியாக விடுவித்தனர்.
இந்த நிலையில், திருவல்லிக்கேணி போலீசார் நேற்று, கார்த்திக்கேயன் உட்பட 10 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

