/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொந்த ஊரில் ஓட்டு போட சென்னையில் பா.ஜ., பிரசாரம்
/
சொந்த ஊரில் ஓட்டு போட சென்னையில் பா.ஜ., பிரசாரம்
ADDED : மார் 27, 2024 12:09 AM
சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட லோக்சபா தொகுதிகளில் ஓட்டு இருப்பவர்களில் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் வசிக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்வதில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது பல வேட்பாளர்கள், சென்னையில் இருக்கும் தங்கள் ஊர்க்காரர்களை ஓட்டுபோட வரவழைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையில் ஓட்டு இருந்து, சென்னையில் வசிப்பவர்களை சொந்த ஊரில் ஓட்டளிக்கச் செய்யும் முயற்சியில் பா.ஜ.,வினர் இறங்கி உள்ளனர்.
இதற்காக கன்னியாகுமரி தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள, சென்னையில் வசிக்கும் பா.ஜ., ஆதரவாளர்களின் பட்டியலை தயாரித்து, வாட்ஸாப் வாயிலாக ஒருங்கிணைக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
கோவையில் அண்ணாமலைக்காக பணியாற்ற முன்வந்துள்ள தன்னார்வலர்களிடம், சென்னையில் வசிக்கும் கோவை தொகுதி வாக்காளர்களை அடையாளம் கண்டு, ஏப்ரல் 19ம் தேதி அழைத்து வரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

