/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரச மரக்கிளை விழுந்து ஆட்டோ, டீ கடை சேதம்
/
அரச மரக்கிளை விழுந்து ஆட்டோ, டீ கடை சேதம்
ADDED : ஆக 10, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னையில் சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள நாயக்கர் காம்ப்ளக்ஸ் அருகே இருந்த அரச மரக்கிளை முறிந்து விழுந்தது.
இதில், அங்கிருந்த ஆட்டோ மற்றும் டீ கடை சேதமடைந்தன. இதில் காயமடைந்த டீ கடை உரிமையாளர் பாபு, 48, என்பவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

