/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பள்ளத்தால் விபத்து ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
/
சாலை பள்ளத்தால் விபத்து ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
சாலை பள்ளத்தால் விபத்து ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
சாலை பள்ளத்தால் விபத்து ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
ADDED : ஜூலை 13, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை தாம்பரம் அடுத்த படப்பை அருகே, செரப்பணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா, 48. இவர், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில், ஒரகடத்தில் இருந்து வண்டலுார் சாலையில் நேற்று மாலை சென்றார்.
படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியைக் கடந்த போது, சாலையில் இருந்த பள்ளத்தால் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியே சென்ற வாகனம்மோதியதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே அனுசுயா பலியானார்.
மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.