/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூவர் பலியான விவகாரம் மது விடுதி ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
/
மூவர் பலியான விவகாரம் மது விடுதி ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
மூவர் பலியான விவகாரம் மது விடுதி ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
மூவர் பலியான விவகாரம் மது விடுதி ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு
ADDED : மார் 30, 2024 12:35 AM
ஆழ்வார்பேட்டை, சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலை பகுதியில், 'செக்மேட்' என்ற பெயரில் பிரபல மதுபான விடுதி செயல்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், ஊழியர்களான மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ், 22, திருநங்கை லில்லி, 24, மற்றும் சென்னையைச் சைக்ளோன் ராஜ், 42, ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இரவு விடுதியை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், 'சீல்' வைக்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தார்.
இந்த விவகாரத்தில், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, மதுபான விடுதி மேலாளர் சதீஷ், 39, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும், ஊழியர்கள் 12 பேர் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடக்கிறது.