/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து
/
மேம்பாலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து
ADDED : ஏப் 29, 2024 01:41 AM

மேடவாக்கம்:மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி, வி.ஜி.பி., லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கிரீஸ்குமார், 40. இவர் நேற்று அதிகாலை, தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி பிரதான சாலை வழியாக, தன் 'ஹோண்டா சிட்டி' காரை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், காலை 5:00 மணியளவில் மேடவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்ற போது, பாலத்தின் திருப்பத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. பின், பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதிய கார், தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் இருந்த பாதுகாப்பு பலுான் அதிர்ஷ்டவசமாக திறந்ததால், கிரீஸ்குமார் சிறு காயத்துடன் உயிர் தப்பி, காருக்குள் சிக்கிக் கிடந்தார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தினர்.
விபத்து நடந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

