/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.44.37 லட்சம் மோசடி மணப்பாக்கம் நபர் கைது
/
ரூ.44.37 லட்சம் மோசடி மணப்பாக்கம் நபர் கைது
ADDED : ஏப் 04, 2024 12:36 AM

சென்னை,
மாதவரத்தைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் டேனியல். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வெளிநாட்டில் வேலை தேடிய தன்னிடம், ஐரோப்பா நாட்டின் எல்லை பகுதியான செர்பியாவில் மின்துாக்கி ஆப்பரேட்டர் வேலை வாங்கி தருவதாக, மணப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி கூறினார். இதற்காக தன்னிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால், ஐரோப்பாவிற்கு பதிலாக இலங்கைக்கு அனுப்பிவிட்டார்.
இதேபோல், 27 பேரிடம் இருந்து, 44.37 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வெளிநாட்டில் வேலை வாங்கி தராமல் ஏமாற்றிய ரவியிடம், பிராங்க்ளின் டேனியல் பணத்தை கேட்டபோது, 'அடித்து உதைத்து விடுவேன்' என மிரட்டியதும், பின் விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தை மூடி, தலைமறைவானதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று மணப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவியை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த ஆய்வாளர் வினோத்குமார், உதவி ஆய்வாளர்கள் கனகராஜ், நாகராஜ் ஆகியோரை கமிஷனர் பாராட்டினார்.

