/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டாஸ்க்' முடித்தால் பெரிய 'கமிஷன்' ரூ.1.59 கோடி சுருட்டிய 3 பேர் கைது
/
'டாஸ்க்' முடித்தால் பெரிய 'கமிஷன்' ரூ.1.59 கோடி சுருட்டிய 3 பேர் கைது
'டாஸ்க்' முடித்தால் பெரிய 'கமிஷன்' ரூ.1.59 கோடி சுருட்டிய 3 பேர் கைது
'டாஸ்க்' முடித்தால் பெரிய 'கமிஷன்' ரூ.1.59 கோடி சுருட்டிய 3 பேர் கைது
ADDED : ஏப் 04, 2024 12:34 AM

ஆவடி,
பூந்தமல்லியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 64. இவர், கத்தார் நாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம், இவரது 'டெலிகிராம்' செயலியில், பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்து 'லிங்க்' ஒன்று வந்துள்ளது.
முத்துகிருஷ்ணன் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது, அதில் கொடுக்கப்பட்டு இருந்த பலகட்ட 'டாஸ்க்'குகளை முடித்தவுடன், 'கமிஷன்' கிடைக்கும் என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும், இவரது மொபைல் போன் எண் டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டது. அதில் பலரும், தங்களுக்கு பெரிய தொகை கமிஷனாக கிடைத்துள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.
இதை நம்பிய முத்துகிருஷ்ணன், 'டாஸ்க்' ஆர்வமாக விளையாடி உள்ளார். அவர் எதிர்பார்த்தது போல, ஒரு சில 'டாஸ்க்' முடித்தவுடன், அவர் வங்கி கணக்கிற்கு சிறிய தொகை வந்துள்ளது.
இதனால் உற்சாகமான முத்துகிருஷ்ணன், அடுத்தடுத்து 'டாஸ்க்'குகளை முடித்துள்ளார்.
பெரிய கமிஷன் தொகை வென்றுள்ளார். ஆனால், அது வங்கி கணக்கிற்கு வரவில்லை. இது குறித்து அவர் விசாரித்தார். அப்போது, தொடர்ந்து கமிஷன் தொகை பெற வேண்டுமெனில், குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என, மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, முத்துகிருஷ்ணன், அந்த வங்கி கணக்கிற்கு 1.51 கோடி ரூபாய் அனுப்பியுள்ளார். இருந்தும் கமிஷன் தொகை வரவில்லை. அப்போது தான், ஏமாற்றப்பட்டதை முத்துகிருஷ்ணன் உணர்ந்தார்.
அதேபோல, திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தில்லி குமாரி, 33, என்பவரிடமும், மர்ம நபர்கள் மேற்கூறியவாறு 8.31 லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளனர்.
இந்த இரு புகார்கள் குறித்தும், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
ஆவடி 'சைபர் கிரைம்' குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில், வங்கி கணக்கு வாயிலாக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 33, பெரம்பூரைச் சேர்ந்த சதாம் ஹுசைன், 32, மற்றும் சண்முகவேல், 33, ஆகியோர் சிக்கினர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

