/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவில் இருந்து 303 கிலோ கஞ்சா கடத்திய நால்வருக்கு தலா 12 ஆண்டு சிறை
/
ஆந்திராவில் இருந்து 303 கிலோ கஞ்சா கடத்திய நால்வருக்கு தலா 12 ஆண்டு சிறை
ஆந்திராவில் இருந்து 303 கிலோ கஞ்சா கடத்திய நால்வருக்கு தலா 12 ஆண்டு சிறை
ஆந்திராவில் இருந்து 303 கிலோ கஞ்சா கடத்திய நால்வருக்கு தலா 12 ஆண்டு சிறை
ADDED : மே 14, 2024 12:37 AM
சென்னை,
ஆந்திராவில் இருந்து, சென்னை வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக, கடந்த 2019 செப்., 19ல் சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், காரனோடை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில், சென்னை பதிவெண் கொண்ட வெள்ளை நிற 'டொயோட்டா பார்ச்சூனர்' வாகனத்தில் இருந்து இறங்கிய நபர், அருகில் ஆரஞ்ச் நிற வெஸ்பா டூ-வீலரில் இருந்த நபரிடம் பார்சல்களை வழங்க முயற்சித்தார்.
இதை பார்த்த போலீசார், இரு வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த பைகளில், மொத்தம் 303.3 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்க, பி.ரமேஷ் நிதியுதவி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் செல்லுாரைச் சேர்ந்த மனோகரன், 33, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த எம்.விஜயகுமரன், 45, உத்தமபாளையத்தைச் சேர்ந்த டி.சந்திரன், 39, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.ரவி, 57, மதுரை கே.புதுார் பகுதியைச் சேர்ந்த பி.ரமேஷ், 52, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணையின்போது சந்திரன் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
மீதமுள்ள நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.
போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.பாலாஜி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,' நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே, அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் 10.40 லட்சம் ரூபாய் விதித்து தீர்ப்பளித்தார்.

