/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தின் சக்கரத்தில் கோளாறு 'ரன்வே'யில் 1 மணி நேரம் 'டென்ஷன்'
/
விமானத்தின் சக்கரத்தில் கோளாறு 'ரன்வே'யில் 1 மணி நேரம் 'டென்ஷன்'
விமானத்தின் சக்கரத்தில் கோளாறு 'ரன்வே'யில் 1 மணி நேரம் 'டென்ஷன்'
விமானத்தின் சக்கரத்தில் கோளாறு 'ரன்வே'யில் 1 மணி நேரம் 'டென்ஷன்'
ADDED : ஆக 11, 2024 01:44 AM

சென்னை:துபாய் - சென்னை இரு மார்க்கத்திலும், தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் காலை 9:50 மணிக்கு, சென்னையில் இருந்து 240 பயணியருடன் துபாய்க்கு புறப்பட, 'எமிரேட்ஸ்' விமானம் தயாரானது.
ஓடுபாதையில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் 'நோஸ் வீல்' எனும் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தெற்கு திசையில் செல்ல வேண்டிய நிலையில், திடீரென வடக்கு திசையில் நின்றது.
நீண்ட நேரமாக அச்சக்கரம் செயல்படாததால், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக, விமான தரைத்தள பராமரிப்பு பணியாளர்கள் விரைந்து வந்து, இழுவை வண்டியில் விமானத்தை நகர்த்தி சென்றனர்.
பின், விமானத்தின் சக்கரங்கள் சரிசெய்யப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக 11:10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், நேற்று முன்தினம் காலை 10:00 மணியில் இருந்து 11:10 மணி வரை, பிரதான ஓடுதளத்தில் இயங்கும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின், இரண்டாவது ஓடுபாதையில் இயக்கப்பட்டன.
இந்த நிகழ்வு தொடர்பாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
முதன்மை பிரதான ரன்வே தற்காலிகமாக செயல்படாமல் போனது, விமானியின் கவனக்குறைவா அல்லது தொழில்நுட்ப பிரச்னையா என்பது குறித்து விசாரனை நடக்கிறது.

