/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெங்கப்பாக்கம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் கிராம செயலகம்
/
வெங்கப்பாக்கம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் கிராம செயலகம்
வெங்கப்பாக்கம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் கிராம செயலகம்
வெங்கப்பாக்கம் ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் கிராம செயலகம்
ADDED : மார் 02, 2024 12:07 AM

வெங்கப்பாக்கம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தில், ஊராட்சி அலுவலகம் இயங்குகிறது. அதன் கட்டடம், தற்போது சீரழிந்தது.
அதனால், பல்வேறு சேவைகள் பெற வரும் மக்களுக்கு, போதிய இட வசதியில்லை. அலுவலக கோப்புகளை பாதுகாப்பாக வைக்க இயலவில்லை. இதையடுத்து, வட்டார வளர்ச்சி நிர்வாகம், பழைய அலுவலக பகுதியை தவிர்த்து, வேறு இடத்தில் புதிதாக அலுவலகம் கட்ட முடிவெடுத்தது.
ஊராட்சி அலுவலக பகுதியிலேயே, கிராம நிர்வாக அலுவலக சேவையும் பெறும் வகையில், கிராம செயலகமாக மேம்படுத்துவது, தற்போது நடைமுறையில் உள்ளது.
அதேபோல், வெங்கப்பாக்கத்திலும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, புதிய கட்டட தேவை ஏற்பட்டது. எனவே, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுடன், கிராம செயலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த கட்டடத்தை, மக்கள் பயன்பாட்டிற்காக, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பச்சையப்பன், ஊராட்சித் தலைவர் வேண்டாமிர்தம் உள்ளிட்டோர், நேற்று துவக்கி வைத்தனர்.

