/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி பாதையாக மேம்படுத்த வலியுறுத்தல்
/
புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி பாதையாக மேம்படுத்த வலியுறுத்தல்
புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி பாதையாக மேம்படுத்த வலியுறுத்தல்
புதுப்பட்டினம் பழைய கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி பாதையாக மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2025 06:04 AM

மாமல்லபுரம்: புதுப்பட்டினத்தில், குறுகியதாக உள்ள பழைய கிழக்கு கடற்கரை சாலையை, கல்பாக்கம் பகுதி முக்கியத்துவம் கருதி, நான் கு வழிச் சாலையாக மேம்படுத்த வேண்டுமென, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கி ன்றனர்.
அணுசக்தி துறையினர் வசிப்பிடமான கல்பாக்கம் நகரியத்தை ஒட்டி உள்ள, புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதியில், பழைய கிழக்கு கடற்கரை சாலை கடந்து செல்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையாக இருந்தது.
புதுப்பட்டினம் பிரதான பகுதியில் சாலை கடப்பதால், தொலைதுார வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
வாகனங்கள் உட்பகுதி வழியே செல்வதை தவிர்க்க கருதி, சற்று தொலைவு மேற்கில், கடந்த 2020ல் புதிதாக, புறவழிப்பாதை அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
நேரான சாலை
இந்நிலையில், மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, நான்கு வழி சாலையாக தற்போது மேம்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட புறவழிப்பாதை, வாயலுார் ஆகிய பகுதிகளில் உள்ள அபாய வளைவுகளை தவிர்க்க, புதுப்பட்டினத்தை முற்றிலும் தவிர்த்து, வசுவசமுத்திரம் பகுதி வழியாக நேரான சாலையாக அமைக்கிறது.
இச்சூழலில், கல்பாக்கம் பகுதிக்கு அவசியமான, பழைய கிழக்கு கடற்கரை சாலை, எந்த மேம்பாடும் இல்லாமல் குறுகி யதாக உள்ளது.
இளையனார்குப்பம் பகுதியில் துவங்கி, புதுப்பட்டினம் பழைய கிராம நிர்வாக அலுவலகம் பகுதி வரை, இச்சாலை 2 கி.மீ., தொலைவு உள்ளது.
கல்பாக்கம், புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பல தேவைகளுக்கு இச்சாலையில் செல்கின்றனர். காலை, மாலை, வாகனங்கள் படையெடுப்பால், இந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
சிரமம்
சென்னை, புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள், புதுப்பட்டினம் சென்று, பயணியரை இறக்கியும், ஏற்றியும் செல்கின்றன.
தற்கால போக்குவரத்து சூழலிலும், சாலை குறுகிய அகலத்துடனே உள்ளதால், சிரமம் ஏற்பட்டு வருகிறது.
கனரக வாகனங்கள், ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் செல்ல முடியவில்லை. சாலை இருபுறமும் மண் அரித்து, அபாய சரிவுடன் உள்ளது. விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
புதுப்பட்டினம் தெற்கு நுழைவிடத்தில், சாலையில் குறுக்கிடும் கால்வாயில், குறுகிய தரைமட்ட பாலமே தற்போது வரை உள்ளது. கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாலம் மூழ்கி , போக்குவரத்து தடைபடுகிறது.
எனவே, கல்பாக்கம் பகுதியின் முக்கியத்துவம் கருதி, இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தி, கால்வாயில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

