/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூதாட்டி மீது டூ - வீலர் மோதி மூவர் படுகாயம்
/
மூதாட்டி மீது டூ - வீலர் மோதி மூவர் படுகாயம்
ADDED : மார் 09, 2024 11:01 PM
மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த கொள்ளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 20, ஒழவெட்டியைச் சேர்ந்தவர் பிரவீன், 23. இருவரும் நேற்று, மதுராந்தகம் -- சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில், கெண்டிரச்சேரி அருகே, 'ஹீரோ ஹோண்டா பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முதுகரையைச் சேர்ந்த சொக்கம்மாள், 55, என்பவர் சாலையை கடக்க முயன்ற போது, இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி காயம் அடைந்தார். இதில், இளைஞர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

