/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் டீக்கடையில் மோதல் இருவருக்கு மண்டை உடைந்தது
/
வண்டலுார் டீக்கடையில் மோதல் இருவருக்கு மண்டை உடைந்தது
வண்டலுார் டீக்கடையில் மோதல் இருவருக்கு மண்டை உடைந்தது
வண்டலுார் டீக்கடையில் மோதல் இருவருக்கு மண்டை உடைந்தது
ADDED : நவ 28, 2024 08:05 PM
கூடுவாஞ்சேரி:அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், 15 பேர் கொண்ட குழுவினர், பணி நிமித்தமாக, செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.
அப்போது, நேற்று காலை 9:00 மணிக்கு, வண்டலுார் அடுத்த ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கருப்பட்டி காபி டீ கடையில், வாகனத்தை நிறுத்தி விட்டு, அனைவரும் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, வாகனத்தின் டிரைவர் மணிகண்டன், மற்றவர்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து, கிரண் என்பவர் மணிகண்டனை கண்டித்து வாக்குவாதம் செய்தார்.
இதில் ஏற்பட்ட மோதலில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அதில், இருவருக்கும் மண்டை உடைந்து, ரத்தம் வெளியேறியது.
புகாரின் பேரில், கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து, தலையில் காயங்களோடு இருந்த இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

