/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்
/
பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்
பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்
பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்
ADDED : நவ 24, 2024 02:26 AM

பவுஞ்சூர், பவுஞ்சூர் அருகே பெரியவெளிக்காடு ஊராட்சிக்குட்பட்ட, பெரியவெளிக்காடு காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
காலனி பகுதியில் இறப்பவர்களின் சடலத்தை, வயல்வெளி பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாயனத்திற்கு செல்ல சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை முறையான பராமரிப்பு இல்லாமல், தற்போது செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளதால், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.