/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஆக 25, 2025 11:12 PM

செங்கல்பட்டு, சிறுமி பலாத்கார வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை, துரைப்பாக்கம் காவல் நிலையை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 9 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன், 29, என்பவர், 2015ம் ஆண்டு ஏப்., 8ம் தேதி, சிறுமியின் கை, கால்களை பிளாஸ்டிக் கயிற்றால் கட்டி, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரை அடுத்து, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பனை போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லஷ்மி ஆஜரானார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முனியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.