ADDED : அக் 06, 2024 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சந்தானம், 27. முடி திருத்தம் செய்யும் தொழில் செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான இவர், ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்ற போது, உறவினர்கள் காப்பாற்றினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மது போதையில் தனது அறைக்கு துாங்கச் சென்றவர், காலை நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை.
சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, மின் விசிறியில் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

