/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் பதவியேற்பு
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் பதவியேற்பு
ADDED : நவ 27, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், நவ. 27-
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில், மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
மாமல்லபுரம் நகராட்சியின் மாற்றுத்திறனாளி கவுன்சிலராக, பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டார். நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொறுப்பு கமிஷனர் சேம் கிங்ஸ்டன், அவருக்கு பதவி பிரமானம் செய்தார்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், ஏழாம் வார்டு பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் நியமிக்கப்பட்டார். செயல் அலுவலர் லதா அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.

