/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தொடர்ந்து முன்னிலை
/
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தொடர்ந்து முன்னிலை
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தொடர்ந்து முன்னிலை
மூத்தோர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி தொடர்ந்து முன்னிலை
ADDED : பிப் 26, 2024 12:38 AM
சென்னை: வெடரன் கிரிக்கெட் இந்தியா அமைப்பு சார்பில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான, மூத்தோர் இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்து வருகிறது. கடந்த 18ல் போட்டிகள் துவங்கின. மார்ச் 2ல் இறுதிப் போட்டி நடக்க உள்ளது.
இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் நடந்த நான்காவது 'லீக்' ஆட்டத்தில், இங்கிலாந்து அணியுடன் அமெரிக்க அணி மோதியது.
'விபி நெஸ்ட்' மைதானத்தில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 39.1 ஓவர்களில் 122 ரன்களில் ஆட்டம் இழந்தது.
பின், எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 28.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்து, எட்டு புள்ளிகளுடன், 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் தலா, 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளன.
தவிர, 'பி' பிரிவில் ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்று, 2ம் இடமும் பிடித்து வருகின்றன.
நேற்று ஓய்வு நாள் என்பதால், போட்டி நடக்கவில்லை. இன்று, ஐந்தாவது லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

